இந்தியா

11 ஆண்டுகளில் 857 யானைகள் இறப்பு: ஒடிசா மந்திரி தகவல்

Published On 2024-12-10 13:10 GMT   |   Update On 2024-12-10 13:10 GMT
  • ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 857 யானைகள் உயிரிழந்துள்ளன.
  • இதில் மின்சாரம் தாக்கி மட்டும் 149 யானைகள் பலியாகி உள்ளன என்றார் வனத்துறை மந்திரி.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநில சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை மந்திரி கணேஷ் ராம் சிங்குந்தியா பேசியதாவது:

ஒடிசா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 857 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகளின் இயற்கைக்கு மாறான மரணத்திற்கு மின்சாரம் தாக்குதலே முக்கியக் காரணம். நோய்கள், விபத்துக்கள், வேட்டையாடுதல் ஆகிய காரணங்களுக்காகவும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

2014-15 மற்றும் 2024-25 (டிசம்பர் 2 வரை) 149 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.

வேட்டைக்காரர்கள் 30 யானைகளைக் கொன்றனர்.

நோய்களாலும் அதிக எண்ணிக்கையாக 305 யானைகள் உயிரிழந்தன.

இயற்கை மரணங்களாக 229 யானைகள் இறந்திருக்கின்றன.

ரெயிலில் அடிபட்டு 29 யானைகள் உயிரிழந்தன.

யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையினால் 16 யானைகள் இறந்தன.

90 யானைகள் இறந்ததன் பின்னணியை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் கண்டறிய முடியவில்லை.

சமீபத்தில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி ஒடிசாவின் வெவ்வேறு காடுகளில் 2,103 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News