இந்தியா

அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட்- பிரதமர் மோடி புகழாரம்

Published On 2024-07-23 09:16 GMT   |   Update On 2024-07-23 09:16 GMT
  • இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
  • விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் பல அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

* ஏழைகள், நடுத்தர மக்கள் வளர்ச்சி அடைவதற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

* திறன் மேம்பாடு, கல்வி உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

* சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான பட்ஜெட்.

* வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் பயணத்திற்கு புதிய பட்ஜெட் துணை நிற்கும்.

* 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு அலவென்சுடன் வேலைவாய்ப்பு பயிற்சி தரும் திட்டம்.

* முத்ரா திட்டம் மூலம் வழங்கப்படும் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுளள்தால் பெண்கள் பயனடைவர்.

* புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.

* வீட்டுக்கொரு தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலான அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

* கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

* புதிய பட்ஜெட் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் பணி வாய்ப்பை பெறுவார்கள்

* விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் பல அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

* இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற புதிய பட்ஜெட் வழிவகுக்கும் என்று கூறினார்.

Tags:    

Similar News