இந்தியா

ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவோம்- பிரதமர் மோடி

Published On 2025-04-07 09:20 IST   |   Update On 2025-04-07 09:20:00 IST
  • சுகாதார பாதுகாப்பில் கவனம் செலுத்தி மக்களின் நல்வாழ்வுக்கான பல்வேறு அம்சங்களில் முதலீடு செய்யப்படும்.
  • ஒவ்வொரு செழிப்பான சமுதாயத்திற்கும் நல்ல ஆரோக்கியமே அடித்தளம்.

புதுடெல்லி:

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு துறையான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 7-ந்தேதி உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-

உலக சுகாதார தினத்தில் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதி எடுப்போம். சுகாதார பாதுகாப்பில் கவனம் செலுத்தி மக்களின் நல்வாழ்வுக்கான பல்வேறு அம்சங்களில் முதலீடு செய்யப்படும்.

ஒவ்வொரு செழிப்பான சமுதாயத்திற்கும் நல்ல ஆரோக்கியமே அடித்தளம் என கூறியுள்ளார்.  



Tags:    

Similar News