இந்தியா

சோனியா, ராகுலுடன் சந்திப்பு: பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்த ரேவந்த் ரெட்டி

Published On 2023-12-06 07:03 GMT   |   Update On 2023-12-06 07:03 GMT
  • தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
  • காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல் மந்திரியாக வரும் 7-ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி:

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதற்கிடையே, டெல்லியில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல் மந்திரியாக வரும் 7-ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று தலைநகர் டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவைச் சந்தித்தார்.


மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

Tags:    

Similar News