இந்தியா
அடுத்தடுத்து வந்த 4 கண்டெய்னர் லாரி- தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ.2000 கோடி
- 4 கண்டெய்னர் லாரிகளையும் பிடித்து சோதனையில் ஈடுபட்டனர்.
- ஐதராபாத் ரிசர்வ் வங்கிக்கு பணம் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்.
ஆந்திரா மாநிலம் கஜரம்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், அடுத்தடுத்து வந்த 3 கண்டெய்னர் லாரிகளையும் பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து கண்டெய்னர் லாரிகளிலும் ரூ.2000 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து ஐதராபாத் ரிசர்வ் வங்கிக்கு பணம் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.