சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்த மும்பை பங்குச் சந்தை வர்த்தகம்
- இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது.
- குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,133.12 புள்ளிகளுடன் வர்த்தகம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று காலை சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏதும் இல்லை. சரிவைத்தான் சந்தித்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,748.57 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய சென்செக்ஸ் புள்ளிகளுடன் 384.55 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்
பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, இந்துஸ்தான்இந்த் வங்கி பங்குகள் ஏற்றம் கண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50
இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 100.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை மதியம் வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் நிஃப்டி 24,753.40 புள்ளிகளில் தொடங்கியது. இன்று நிஃப்டி அதிகபட்சமாக 24,781.25 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,601.75 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
இறுதியாக நிஃப்டி 100.05 புள்ளிகள் குறைந்த நிஃப்டி 24,668.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்
அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி., விப்ரோ, ஓ.என்.ஜி.சி., டைட்டன், அதானி என்டர்பிரைசர்ஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
கோல் இந்தியா, டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைவ் இன்சூரன்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.