இந்தியா
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி இல்லாமல் தவித்த பயணிகள்- வீடியோ வைரல்
- கடந்த 2 நாட்களாக வெப்ப அலை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
- கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏசி இல்லாமல் விமானத்திற்குள் பயணிகள் காத்திருந்ததால் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் ஜூன் மாதத்தில் பாதியை கடந்தபிறகும் வெயில் குறைந்தபாடில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 117 டிகிரியை தொட்டு, அதன்பிறகு கொஞ்சம் குறைந்தாலும் சராசரியாக 110 முதல் 113 வரை வெப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.
கடந்த 2 நாட்களாக வெப்ப அலை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அது நேற்றும் நீடித்தது. டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று அதிகபட்சமாக 113 டிகிரி வெப்பம் பதிவானது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து தர்பங்காவிற்கு செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் (SG 486) இன்று பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏசி இல்லாமல் தவித்தனர்.
டெல்லியில் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏசி இல்லாமல் விமானத்திற்குள் பயணிகள் காத்திருந்ததால் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.