இந்தியா

வீடியோ காலில் டிரஸ்-ஐ கழட்டுங்க.. ஏமாந்த இளம்பெண் - மிரளவைக்கும் 'டிஜிட்டல் கைது' மோசடிகள்

Published On 2024-11-30 18:59 GMT   |   Update On 2024-11-30 19:08 GMT
  • உங்கள் பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளோம்
  • வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர்.

டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை குறிவைக்கின்றனர். அவர்களின் வலையில் விழுந்த பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் இந்த மோசடி கும்பலிடம் குஜராத்தை சேர்ந்த 90 வயது முதியவர் 1 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

முதியவரின் பெயரில் மும்பையில் இருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதியவரின் வங்கி கணக்கு மூலம் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார்.

மேலும் முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாக கூறி, 15 நாட்களுக்கு அவர் யாரையும் தொடர்பு கொள்ள விடாமல் செய்துள்ளனர். முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை அவர்கள் எடுத்துள்ளனர். முதியவரின் குடும்பத்தினர் விஷயம் அறிந்து போலீசில் புகார் அழித்ததை அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

46 டெபிட் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், 28 சிம் கார்டுகள் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் செயல்பட்டு வரும் ஒரு கும்பலுடன் சேர்ந்து இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளது. இதுபோல பல்வேறு டிஜிட்டல் கைது மோசடி கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

 

மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரிடம் டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி வீடியோ காலில் ஆடைகளை கழற்ற கட்டப்படுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. மும்பையில் போரிவலி கிழக்கு பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வீடியோ காலில் தொடர்புகொண்ட மோசடி நபர்கள் தங்களை டெல்லி காவல்துறையினரைப் போல் காட்டிக்கொண்டு அந்த பெண் மீது பண மோசடி வழக்கு போடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

 

வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர். மேலும் உடலை சோதனை செய்யவேண்டும் என்று கூறி வீடியோ காலிலேயே ஆடைகளை கழற்ற வற்புறுத்தியுள்ளனர். மோசடியை உணர்ந்த பெண் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News