இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

Published On 2023-02-23 16:23 IST   |   Update On 2023-02-23 16:23:00 IST
  • விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார் ஆஜரானார்.
  • வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தியது.

விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார் ஆஜராகினார். அவரது வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பிபவ் குமார் உள்ளிட்ட 36 பேர் மீது ரூ.1000 கோடி பணமோசடி தொடர்பான ஆதாரங்களை அழிக்க 170 செல்பேசி அழைப்புகள் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுகிறது" என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News