இந்தியா

தெலுங்கு சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்: உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து

Published On 2024-11-07 03:05 GMT   |   Update On 2024-11-07 03:05 GMT
  • அமெரிக்காவின் துணை அதிபராகும ஜேடி வான்ஸ்க்கு எனது இதயம் கணிந்த வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அவரது வெற்றியால ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட உஷா வான்ஸ் அமெரிக்காவின் 2-வது பெண்மணியாக உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதனால் அவரது மனைவி உஷா வான்ஸ் அமெரிக்காவின் 2-வது பெண்மணியாக இருக்கிறார். அமெரிக்காவில் அதிபரின் மனைவி முதல் பெண்மணி என அழைக்கப்படுவார். துணை அதிபர் மனைவி 2-வது பெண்மணி என அழைக்கப்படுவார்.

உஷா வான்ஸ் ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இதன்மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவின் 2-வது பெண்மணியாக இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிலையில் உஷா வான்ஸ்க்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு தனது வாழ்த்து செய்தியில் "அமெரிக்காவின் துணை அதிபராகும ஜேடி வான்ஸ்க்கு எனது இதயம் கணிந்த வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது வெற்றியால ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட உஷா வான்ஸ் அமெரிக்காவின் 2-வது பெண்மணியாக உள்ளார். இது உலகத்தில் உள்ள ஆந்திர சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம். ஆந்திராவுக்கு வருகை தருவதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்" இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது.

1970-களில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவுக்கு உஷாவின் குடும்பம் குடிபெயர்ந்தது. சான்டியாகோவிலேயே பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப்பட்டமும் பெற்றுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கீழ் சட்ட வல்லுநராக பணியாற்றினார். கடந்த 2014-ம் ஆண்டில் குடியரசு கட்சியில் இணைந்த உஷா ஒரு விவாத நிகழ்ச்சியின்போது ஜே.டி.வான்ஸ்- ஐ சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே அதே ஆண்டில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News