இந்தியா

வந்தே பாரத் ரெயிலிலும் குவிந்த முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டம்

Published On 2024-06-11 14:46 IST   |   Update On 2024-06-11 14:46:00 IST
  • வந்தே பாரத் ரெயில்கள் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டவை. அதில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது.
  • வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யாதவர்களும் திடீரென ஏ.சி. பெட்டிகளில் ஏறி பயணிப்பதும், அவர்களுடன் சக பயணிகள் சண்டையிடும் காட்சிகளும் இணையத்தில் அடிக்கடி வெளியாவது உண்டு.

இந்நிலையில் வந்தே பாரத் ரெயிலிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் உத்தரகாண்டின் டேராடூனுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் ஏராளமான பயணிகள் நின்றபடி பயணம் செய்யும் காட்சிகள் உள்ளது. மேலும் பயணிகள் நிற்க கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருப்பதும் வீடியோவில் தெரிகிறது.

வந்தே பாரத் ரெயில்கள் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டவை. அதில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது. அவ்வாறு இருக்கும் போது வந்தே பாரத் ரெயிலுக்குள் இவ்வளவு பயணிகள் கூட்டம் வந்தது எப்படி என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரெயில் நிலையங்களில் மெட்ரோவில் இருப்பதை போன்று டிக்கெட் இல்லாமல் யாராலும் உள்ளே வர முடியாது என்ற முறையை கொண்டு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.


Tags:    

Similar News