இந்தியா

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பணத்தை பெற்றுக்கொண்டு காதலர்களுடன் ஓட்டம்பிடித்த மனைவிகள்

Published On 2024-07-08 13:16 GMT   |   Update On 2024-07-08 13:16 GMT
  • இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை பயனார்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
  • 11 பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயுள்ளனர்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை பயனார்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இந்த திட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் திருமணமான 11 பெண்கள் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகையை பெற்றுக் கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடியுள்ளார். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் 2,350 பயனாளர்களுக்கு வீடு காட்டும் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 11 பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயுள்ளனர்.

இந்த விவகாரத்தை அடுத்து இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணை பணம் கொடுப்பத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

Tags:    

Similar News