கிரிக்கெட் (Cricket)
null

5 பேர் டக் அவுட்.. பல மோசமான சாதனைகளை படைத்த இந்திய அணி

Published On 2024-10-17 09:35 GMT   |   Update On 2024-10-17 09:35 GMT
  • நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
  • இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது.

தொடர் மழை காரணமாக நேற்றைய ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

உணவு இடைவேளை வரை 34 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுளை இழந்த இந்திய அணி, இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஷ்வின் ரன் எடுக்காமலும், அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து சார்பில் ரூர்கி 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும் டிம் சௌதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணி 46 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதன் மூலம் பல மோசமான சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி இந்திய மண்ணில் மிக குறைந்த ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகள் விவரம்:-

46 - இந்தியா vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*

62 - நியூசிலாந்து vs இந்தியா, மும்பை, 2021

75 - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், டெல்லி, 1987

76 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, அகமதாபாத், 2008

79 - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நாக்பூர், 2015

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 36 ஆகும். 2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மோசமான சாதனை நிகழ்த்தப்பட்டது. அந்த பட்டியல் பின்வருமாறு:-

36 vs ஆஸ்திரேலியா, அடிலெய்டு, 2020

42 vs இங்கிலாந்து, லார்ட்ஸ், 1974

46 vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*

58 vs ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன், 1947

58 vs இங்கிலாந்து, மான்செஸ்டர், 1952

ஒரு இன்னிங்சில் இந்தியா அணி வீரர்கள் 5 பேர் டக் அவுட் ஆவது இது 4-வது முறை. மேலும் நியூசிலாந்துக்கு எதிராக 2-வது முறை 5 பேர் டக் அவுட் ஆகி உள்ளனர். இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக 6 பேர் டக் அவுட் ஆகி இந்த பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ளது. அந்த பட்டியல் பின்வருமாறு:-

6 vs இங்கிலாந்து, மான்செஸ்டர், 2014 (முதல் இன்னிங்ஸ்)

6 vs தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன், 2024 (2வது இன்ன்ஸ்)

5 vs ஆஸ்திரேலியா, அடிலெய்டு, 1948 (3வது இன்ன்ஸ்)

5 vs இங்கிலாந்து, லீட்ஸ், 1952 (3வது இன்ன்ஸ்)

5 vs நியூசிலாந்து, மொஹாலி, 1999 (முதல் இன்னிங்ஸ்)

5 vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024 (முதல் இன்னிங்ஸ்)*

Tags:    

Similar News