ஐ.பி.எல்.(IPL)
டி20-யில் 13 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி சாதனை..!
- கிறிஸ் கெய்ல் 381 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்.
- விராட் கோலி 386 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனின் 20ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியின் 3-ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டியபோது 18 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டியிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்.
இதன்மூலம் டி20 போட்டியில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரரும், ஒட்டுமொத்தமாக 5ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் (381 இன்னிங்ஸ்), அலேக்ஸ் ஹேல்ஸ் (474), சோயிப் மாலிக் (487), பொல்லார்டு (594) ஆகியோர் 13 அயிரம் ரன்களை கடந்துள்ளனர். விராட் கோலி 386 இன்னிங்கில் கடந்துள்ளார்.