IPL 2025: இனி Impact Player இல்ல.. கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்
- முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே சஞ்சு விளையாடினார்.
- முதல் மூன்று போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. அந்த தொடரின் போது சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது.
இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக விளையாடினார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.
சென்னைக்கு எதிரான போட்டி முடிந்த கையோடு தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள என்சிஏவிற்கு சென்றுள்ளார்.
அங்கு நடந்த பரிசோதனையில் தேர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த போட்டிகளில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சன் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.