விளையாட்டு
பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 7வது சுற்றில் அரவிந்த் சிதம்பரம் முன்னிலை
- அரவிந்த் சிதம்பரம் 7-வது சுற்றிலும் முன்னிலை வகிக்கிறார்.
- பிரக்ஞானந்தா 2வது இடத்தில் நீடிக்கிறார்.
பிராக்:
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதன் 7வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் யூ உடன் மோதினார்.
வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 61-வது நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார்.
இதேபோல், கறுப்பு நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலில் ரஷியாவின் அனிஷ் கிரியுடன் மோதி வெற்றி பெற்றார்.
இதையடுத்து,76-வது சுற்று முடிவில் அரவிந்த் சிதம்பரம் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.