search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது.
    • இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.

    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.

    இதையடுத்து, பிரான்ஸ் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் தேவாலயத்தை 5 ஆண்டுகளுக்குள் புனரமைப்பு செய்வதாக உறுதி அளித்திருந்தார்.

    அதன்படி, சுமார் 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு நாட்டர்டாம் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாரிசின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுக்குப் பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

    இந்த தேவாலய திறப்பு விழாவில் அதிபர் இம்மானுவல் மேக்ரான், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

    ஒரு சாத்தியமற்ற மறுசீரமைப்பை பிரான்ஸ் சாத்தியப்படுத்தி உள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
    • அதிபர் இமானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

    பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரான்ஸ் அரசு கவிந்தது.

    3 மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற பார்னியேர் இதனை தொடர்ந்து தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    சமூகப் பாதுகாப்பு நிதி மசோதாவை சிறப்பு அதிகாரம் மூலம் அதிபர் மேக்ரான் நிறைவேற்ற முயன்றதால் அரசு கவிழ்க்கப்பட்டது.

    பிரான்ஸ் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    • சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
    • இதுதொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    பாரீஸ்:

    பிரபல சமூகவலைதள செயலியான 'டிக்-டாக்' தனியுரிமையை மீறுவதாக கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனையடுத்து குழந்தைகளிடையே மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றை 'டிக்-டாக்' செயலி தூண்டுவதாக கூறி 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதனால் 'டிக்-டாக்' செயலி புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறது.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்ர்பர்ட் இறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், ரஷிய வீரர் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் ஹம்பர்ட் 6- 7 (6-8), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹம்ப்ர்ட், ஸ்வரேவுடன் மோதுகிறார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி, குரோசியாவின் நிகோலா மெக்டிக்- நெதர்லாந்தின் வெஸ்லி கூலுப் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-7 (13-15), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.

    கடந்த அக்டோபரில் நடந்த வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரிலும் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 3 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை 6-7 (1-7), 6-4, 6-2 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடக்கும் காலிறுதியில் சிட்சிபாஸ், ஸ்வரேவ் உடன் மோதுகிறார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 2 வீரரும் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் ஹம்பர்ட் 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்த தோல்வியின் மூலம் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் 6 வீரரான ரூப்லெவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-7 (6-8), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்த்உ, தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல், மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் பெரேட்டினி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோலவி அடைந்தார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் திடீரென விலகினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர் திடீரென விலகியுள்ளார். வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என நோவக் ஜோகோவிச் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×