search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்
    X

    ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்

    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் டகாஹஷி உடன் மோதினார்.

    இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவான் வீரர் வாங் உடன் மோதினார். இதில் பிரனாய் 21-11, 20-22, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×