டென்னிஸ்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

Published On 2025-04-05 01:40 IST   |   Update On 2025-04-05 01:40:00 IST
  • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
  • இதன் காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.

வாஷிங்டன்:

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான டேனியல் காலின்சுடன் மோதினார்.

இதில் காலின்ஸ் 6-1 என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-0 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News