விளையாட்டு

நார்வே செஸ் தொடரில் அக்கா, தம்பி முதல் இடம்: ரசிகர்கள் மகிழ்ச்சி

Published On 2024-05-30 07:05 GMT   |   Update On 2024-05-30 07:06 GMT
  • நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது முதல் முறை.
  • தம்பியைத் தொடர்ந்து அக்காவும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

ஸ்டாவஞ்சர்:

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும்.

இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.


இந்நிலையில், மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் வைஷாலி. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் 2வது இடத்தில் இருக்கிறார்.

நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவும், அவரது சகோதரி வைஷாலியும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News