என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நார்வே
- நார்வே செஸ் தொடரில் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தத் தொடரில் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்தார்.
நார்வே:
நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சமும், நகமுராவுக்கு ரூ.27 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல், மகளிர் பிரிவில் சீனாவின் ஜுவெஞுன் முதலிடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வைஷாலி 4வது இடமும், கோனேரு ஹம்பி 5-வது இடமும் பிடித்தனர்.
நார்வே செஸ் தொடரில் 3-வது பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
- நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது முதல் முறை.
- தம்பியைத் தொடர்ந்து அக்காவும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
ஸ்டாவஞ்சர்:
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும்.
இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
இந்நிலையில், மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் வைஷாலி. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் 2வது இடத்தில் இருக்கிறார்.
நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவும், அவரது சகோதரி வைஷாலியும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
- கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.
ஸ்டாவஞ்சர்:
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2-வது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார்.
இந்நிலையில், இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
Magnus Carlsen resigns!@rpraggnachess overtakes Fabiano Caruana and jumps into sole first!https://t.co/wJtLtsYIDS#NorwayChess pic.twitter.com/6DGZDqQbrG
— chess24 (@chess24com) May 29, 2024
- நோர்ஜஸ் வங்கி தகுதியான நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி நிறுவனத்தை நீக்கியது.
- நார்வே வங்கி எடுத்துள்ள இந்த முடிவு அதானி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஓஸ்லோ:
நார்வேயின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில், நார்வேயின் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதிக்கு தகுதியான நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் எல்3 ஹாரிஸ் டெக்னாலஜிஸ் மற்றும் சீனாவின் வெய்ச்சாய் பவர் நிறுவனங்களும் கைவிடப்பட்டன.
நார்வே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் மற்றும் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, இதை ஏற்றுக்கொள்ள முடியாத அபாயம் எனக்கூறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நார்வே நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு அதானி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
- எரிக், பருவநிலை மாற்றங்கள் குறித்து முக்கிய கருத்துக்களை கூறுபவர்
- இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்களை ராகுல் கூறினார் என்றார் எரிக்
வட ஐரோப்பாவில் உள்ள பனிமலைகள் அதிகம் கொண்ட சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற நாடு, நார்வே (Norway). இதன் தலைநகரம் ஓஸ்லோ (Oslo).
இந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியும், ராஜதந்திரியுமான 68 வயதான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim), முன்னாள் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டங்களின் செயல் இயக்குனராக பதவி வகித்தவர். இவர், பருவநிலையின் மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து உலக நாடுகள் செயலாற்ற வேண்டியது குறித்து தனது கருத்துக்களை உலகெங்கும் கூறி வருகிறார். கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் அதிக மக்கள் தொகையின் காரணமாக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்த நேரிடும் என்றும் இதனால் இந்தியாவில் காடுகள் அழியும் நிலை அதிகரிக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்றார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் அக்கட்சி தெரிவித்துள்ளதாவது:
ராகுல் காந்தி, நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான எர்னா ஸோல்பர்க் (Erna Solberg) மற்றும் ஸ்வெர் மிர்லி (Sverre Myrli) ஆகியோருடன் நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் ஆகியோரையும் சந்தித்தார். அந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது.
இவ்வாறு அக்கட்சி தெரிவித்திருந்தது.
நார்வே சென்ற ராகுல், எரிக் சொல்ஹெய்மையும் அங்கு சந்தித்தார்.
இது குறித்து எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு செய்திருப்பதாவது:
நவீன இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முன்னணி வணிக தலைவர்களுடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்தது. இதில் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல், இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும், அடுத்த வருடம் அந்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் பின்னணியில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அவரது கருத்துக்களை வெளியிட்டதாக எரிக் கூறினார்.
Great to receive Rahul Gandhi in Oslo ??!
— Erik Solheim (@ErikSolheim) September 12, 2023
The Modern India hosted a most interesting meeting for business leaders with a wish to invest in India ??. The Indian opposition leader laid out his vision for India and his view on the current political situation before elections. pic.twitter.com/jMJPAMHMrH
- நார்வே மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
- ஒஸ்லோ தூதரகத்தில் உளவு பார்த்ததாகக் கூறி 15 ரஷிய தூதர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
ஒஸ்லோ:
நார்வே மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என நார்வே ராணுவ மந்திரி ஜோர்ன் அரில்ட் கிராம் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தில் உளவுத்துறை வேலை செய்ததாக குற்றம் சாட்டி 15 ரஷிய தூதர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நார்வேயை விட்டு வெளியேற வேண்டும் என நார்வே வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நார்வே வெளியுறவுத்துறை மந்திரி அன்னிகென் ஹுயிட்பெல்ட் கூறுகையில், நார்வேயில் ரஷிய உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்கொள்வதற்கும், குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்