சென்னை- நெல்லை இரு மார்க்கத்திலும் வந்தே பாரத் ரெயில் ரத்து
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
- தண்டவாளங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளதால் ரெயில்கள் இயக்க முடியாத நிலை.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினத்தில் இருந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. கோவில்பட்டியில் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக உள்ளது.
இதனால் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியிலும் குளம்போல் வெள்ளம் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை- நெல்லை, நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிஜாமுதீன்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் விரைவு ரெயில் ஆகியவை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சாத்தூர் ரெயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் ரெயில் பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.