தமிழ்நாடு

தூத்துக்குடியை தொடர்ந்து பாம்பன் மீனவர்களுக்கும் அபராதம்- இலங்கை நீதிமன்றம்

Published On 2024-09-18 13:44 GMT   |   Update On 2024-09-18 13:44 GMT
  • அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு.
  • தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிறைக்காவல் முடிந்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 8ம் தேதி புத்தளம் கடல் பகுதியில் 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது ெசய்தனர்.அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, இன்று நடைபெற்ற மற்றொரு விசாரணையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News