சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு
- செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மார்ச் 04) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர், தி.மு.க. தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர். மாலை 4.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் இரவு 8.15 மணிக்கு சீர்காழி சென்றடைந்தது.
சீர்காழி ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றிரவு அங்கேயே தங்குகிறார்.
நாளை காலை அங்கிருந்து மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். நாளை பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மாலை 6.15 மணிக்கு சென்னை திரும்புகிறார்.