மணிமுத்தாறு, காரையாறு, சேர்வலாறில் இருந்து 42 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
- அம்பாசமுத்திரத்தில் அதிகபட்சமாக 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
- மணிமுத்தாறில் 31.70 செ.மீட் மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று காலை 4.30 நிலவரப்படி 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 31.70 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
தற்போதும் மழை பெய்து வருவதால் அம்பையில் உள்ள மணிமுத்தாறு அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 86.66 அடி உயரமாக இருந்த நிலையில், ஒன்று ஒரே நாளில 108.8 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு தற்போது 17 அயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் 143.6 அடி உயரம் கொண்டி கரையாறு அணையில் 133 அடி உயரமாக நீர்மட்டம் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த மூன்று அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த மூன்று அணைகளிலும் இருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 80 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.