தமிழ்நாடு செய்திகள்

ராமநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

Published On 2025-04-06 13:43 IST   |   Update On 2025-04-06 13:52:00 IST
  • பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மத்திய பா.ஜ.க. அரசின் கனவுத்திட்டமான பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதனைத் தொடர்ந்து ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செங்குத்து வடிவிலான தூக்கு பாலத்தை ரிமோட் மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி, அதன் வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து சென்றதை பார்வையிட்டார். நாட்டின் தேசியக்கொடி பறக்க அதில் இருந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடியை பார்த்து சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்தினர். பதிலுக்கு பிரதமர் மோடியும் வணக்கம் செலுத்தி கையசைத்தார்.

சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து பிரதமர் மோடி காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார்.

Tags:    

Similar News