தமிழ்நாடு

"WE STAND FOR WOMEN HARRASEMENT"- த.வெ.க.வின் பேனர் வாசகத்தால் சர்ச்சை

Published On 2025-03-08 17:31 IST   |   Update On 2025-03-08 17:31:00 IST
  • பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.
  • தவெக சார்பில் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, " 2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக ஆட்சியை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம்" என்றார்.

மேலும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது ஆங்காங்கே தவெக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, வேலூர் கிழக்கு மாவட்ட த.வெ.க சார்பாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில், "WE STAND FOR WOMEN HARRASEMENT" என்று அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

WE STAND AGAINST WOMEN HARASSMENT என்பதே பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என்பதற்கான பொருள்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News