உலகம்

வங்காளதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்

Published On 2024-07-04 03:18 GMT   |   Update On 2024-07-04 03:18 GMT
  • இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார்.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி நேற்று பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார்.

அப்போது இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சிஎன்எஸ் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு இடையேயான பயிற்சி மற்றும் கூட்டுப் பயிற்சிகளில் கூடுதல் வழிகள் குறித்து விவாதித்தனர்.

Tags:    

Similar News