உலகம்

உளவு பார்த்த விவகாரம் - 15 ரஷிய தூதர்களை நீக்கியது நார்வே அரசு

Published On 2023-04-13 11:04 GMT   |   Update On 2023-04-13 11:12 GMT
  • நார்வே மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
  • ஒஸ்லோ தூதரகத்தில் உளவு பார்த்ததாகக் கூறி 15 ரஷிய தூதர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

ஒஸ்லோ:

நார்வே மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என நார்வே ராணுவ மந்திரி ஜோர்ன் அரில்ட் கிராம் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தில் உளவுத்துறை வேலை செய்ததாக குற்றம் சாட்டி 15 ரஷிய தூதர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நார்வேயை விட்டு வெளியேற வேண்டும் என நார்வே வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நார்வே வெளியுறவுத்துறை மந்திரி அன்னிகென் ஹுயிட்பெல்ட் கூறுகையில், நார்வேயில் ரஷிய உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்கொள்வதற்கும், குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை என தெரிவித்தார்.

Tags:    

Similar News