search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    சென்னையில் சிக்கிய பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார்
    X

    சென்னையில் சிக்கிய பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார்

    • பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் மாடல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 345 முதல் 420 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பிஒய்டி அட்டோ 3 மாடல் சென்னை அருகில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடலில் பிளேடு பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.

    புதிய பிஒய்டி அட்டோ 3 மாடல் வெளிநாட்டு சந்தைகளில் 50 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு ரேன்ஜ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரேன்ஜ் என இருவித வேரிண்ட்களில் கிடைக்கிறது. இவை முறை 345 மற்றும் 420 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. பேட்டரி திறனுக்கு ஏற்ப இந்த காருடன் 204 பிஎஸ் மற்றும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.


    பிஒய்டி அட்டோ 3 மாடலில் 12.8 இன்ச் சுழலும் இன்போடெயின்மெண்ட் டச்-ஸிகீரன், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூப், ADAS சிஸ்டம், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கிராஸ்-ஒவர் அளவில் பெரியதாக இருக்கிறது.

    இந்தியாவில் சிகேடி முறையில் கொண்டுவரப்படும் பிஒய்டி அட்டோ 3 விலை ரூ. 30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த எலெக்ட்ரிக் கார் அக்டோபர் மாத பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    Photo Courtesy: PoNsam ChaRles

    Next Story
    ×