search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    புதிதாக மைக்ரோ எஸ்யுவி உருவாக்கும் ஹூண்டாய்
    X

    புதிதாக மைக்ரோ எஸ்யுவி உருவாக்கும் ஹூண்டாய்

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது மைக்ரோ எஸ்யுவி ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    டாடா பன்ச் மைக்ரோ எஸ்யுவி-க்கு போட்டியை ஏற்படுத்தும் புது காரை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த கார் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் கார்களான கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேச்பேக் மற்றும் ஆரா காம்பேக்ட் செடான் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மை பயன்படுத்தும் மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை பெறும். இந்த கார் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் காம்பேக்ட் யுடிலிட்டி வாகனமாக நிலை நிறுத்தப்படும். இது எஸ்யுவி பிரிவில் குறைந்த விலை மாடலாக இருக்கும். பட்ச் ஸ்டைலிங் மற்றும் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும். தோற்றத்தில் இந்தகார் கேஸ்பர் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கேஸ்பர் மாடலை ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி மாடலாக புதிய மைக்ரோ எஸ்யுவி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×