search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இந்தியாவில் XUV700 யூனிட்களை ரிகால் செய்யும் மஹிந்திரா
    X

    இந்தியாவில் XUV700 யூனிட்களை ரிகால் செய்யும் மஹிந்திரா

    • மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் XUV700 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • புதிய XUV700 யூனிட்களில் பிழை கண்டறியப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் நடவடிக்கை குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா தனது XUV700 மாடல்களை ரிகால் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.

    தற்போதைய தகவல்களின் படி ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட மஹிந்திரா XUV700 டீசல் வேரியண்ட் மட்டுமே ரிகால் செய்யப்படுகிறது. மஹிந்திரா XUV700 AT AWD 7 STR மற்றும் AX 7 AT AWD லக்சரி பேக் 7 STR வேரியண்ட்கள் மட்டும் ரிகால் செய்யப்பட்டு இருக்கிறது. ரிகால் செய்யப்படும் மாடல்களில் என்ஜினை பின்புற ஆக்சிலுடன் இணைக்கும் ப்ரோபெல்லர் ஷாப்ட்-இல் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.


    பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோர் அருகாமையில் உள்ள சர்வீஸ் மையம் சென்று தங்களின் காரை சரி செய்து கொள்ள முடியும். இந்த பிரச்சினையில் எத்தனை மஹிந்திரா XUV700 யூனிட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த பிரச்சினை காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.

    கடந்த மாதம் தான் மஹிந்திரா நிறுவனம் 30 ஆயிரம் மஹிந்திரா XUV700 யூனிட்களை வினியோகம் செய்தது. தற்போதைய சிப்செட் குறைபாடு காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்கள் ஒரே மாதத்தில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இன்னும் 78 ஆயிரம் XUV700 யூனிட்களை வினியோகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது.

    Next Story
    ×