என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
ஒலா S1 ப்ரோ பேட்டரி இவ்வளவா? அதிர்ச்சி தகவல்!
- ஒலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி பேக் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய ஒலா S1 சீரிஸ் மாடல்களில் உள்ள பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு ஸ்கூட்டர் மாடல்கள் தற்போது அதிக ரேன்ஜ் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக விலை கொண்ட மிகமுக்கிய பாகமாக அதன் பேட்டரிகள் உள்ளன.
இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி விலை எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 87 ஆயிரத்து 298 என கூறும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஒலா 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் விலை ரூ. 87 ஆயிரத்து 298 என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டர் பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் அல்லது அன்லிமிடெட் கிலோமீட்டர் வாரண்டி வழங்கி வருகிறது.
இந்த தகவல்களின் படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை மாற்ற ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விலையில் இருந்து 62 சதவீதம் செலவிட வேண்டும் என தெரிகிறது. தற்போது ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டர் தள்ளுபடியை சேர்த்து ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர சமீபத்தில் ஒலா அறிமுகம் செய்த S1 ஏர் விலை ரூ. 84 ஆயிரத்து 999 ஆகும்.