search icon
என் மலர்tooltip icon

    பைக்

    105கிமீ ரேன்ஜ் வழங்கும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் இந்தியாவில் அறிமுகம்
    X

    105கிமீ ரேன்ஜ் வழங்கும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் இந்தியாவில் அறிமுகம்

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேம்பட்ட செட்டக் மாடல் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
    • 2023 பஜாஜ் செட்டக் மாடலில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் நிறுவனம் 2023 செட்டக் பிரீமியம் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் செட்டக் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்து 910, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் மேம்பட்ட மற்றும் அளவில் பெரிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர 2023 பஜாஜ் செட்டக் மாடல்: மேட் கோர்ஸ் கிரே, கரீபியன் புளூ மற்றும் சாடின் பிளாக் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    இத்துடன் டூ-டோன் சீட், பாடி நிறத்தால் ஆன ரியர் வியூ மிரர்கள், சாடின் கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் ஹெட்லைட் கேசிங் மற்றும் ப்ளின்கர்கள் சார்கோல் பிளாக் நிறம் பூசப்பட்டுள்ளன. இவைதவிர புதிய பஜாஜ் செட்டக் மாடலில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி கொண்ட டிஜிட்டல் கன்சோல், ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், இரண்டு ரைடிங் மோட்கள், டிடிஇ ரீட்அவுட் போன்ற வசதிகள் உள்ளன.

    மெட்டல் பாடிவொர்க் மட்டுமின்றி செட்டக் மாடலின் முன்புறம் ஒற்றை ஸ்ப்ரிங் மற்றும் பின்புறத்தின் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் மற்றும் சிபிஎஸ் வசதி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 12-இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

    2023 பஜாஜ் செட்டக் எலெக்ட்ரிக் மாடலில் 3.8 கிலோவாட் ஹவர் மோட்டார் மற்றும் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 107 கிலோமீட்டர் வரை செல்லும். சாதாரண சார்ஜர் கொண்டு இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்களும் ஆகும்.

    இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×