என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
ரூ. 20 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகமான ஹார்லி பைக்
- ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய ஃபேட் பாப் 114 மோட்டார்சைக்கிள் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய ஃபேட் பாப் 114 சீரிசில் விவிட் பிளாக் நிறம் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் 2023 ஃபேட் பாப் 114 மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஃபேட் பாப் 114 விலை ரூ. 20 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ப இந்த மாடலின் விலை வேறுப்படும்.
2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 மாடலில் 1868சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 92.5 ஹெச்பி பவர், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 5.5 லிட்டர் / 100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18.18 கிலோமீட்டர்) மைலேஜ் வழங்கும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்து இருக்கிறது.
புதிய ஃபேட் பாப் 114 மாடல்- விவிட் பிளாக், ரெட்லைன் ரெட் மற்றும் கிரே ஹேஸ் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் விவிட் பிளாக் நிற வேரியண்டின் விலை ரூ. 20 லட்சத்து 49 ஆயிரம் என்றும் ரெட்லைன் ரெட் மற்றும் கிரே ஹேஸ் நிற வேரியண்ட்களின் விலை ரூ. 20 லட்சத்து 68 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் அழகிய ஹெட்லைட் டிசைன், ஃபியூவல் டேன்க் மீது இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சாப்டு ரியர் ஃபெண்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட், டுவின் பாட் எக்சாஸ்ட், 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் முன்புறம் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் டுவின் டிஸ்க் மற்றும் நான்கு பிஸ்டன்கள், பின்புறம் இரண்டு பிஸ்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் 13.2 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது. இந்த மாடலின் மொத்த எடை 306 கிலோ ஆகும்.
இந்திய சந்தையில் 2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 மாடல் இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ், டிரையம்ப் ராக்கெட் 3, டுகாட்டி எக்ஸ் டயவெல், பிஎம்டபிள்யூ ஆர்18 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்