search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ரூ. 7 லட்சம் விலையில் புதிய கவாசகி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 7 லட்சம் விலையில் புதிய கவாசகி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

    • கவாசகி நிறுவனத்தின் 2023 வல்கன் S மோட்டார்சைக்கிள் ஒற்றை நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • புதிய 2023 வல்கன் S மாடலில் 649சிசி, பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் 2023 வல்கன் S மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி வல்கன் S மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 சீரிசுக்கு இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட், மெட்டாலிக் மேட் கார்பன் கிரே எனும் ஒற்றை நிற ஆப்ஷனில் கிடைக்கிறது. இதுதவிர மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த ஸ்டைலிங் எவ்வித மாற்றமும் பெறவில்லை. 2023 கவாசகி வல்கன் S மாடலிலும் நீண்ட மற்றும் லோ ஸ்டான்ஸ், சிங்கில் பாட் ஹெட்லைட், வளைந்த ஃபியூவல் டேன்க் மற்றும் காம்பேக்ட் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கவாசகி 2023 மாடலில் 649சிசி, பேரலல் டுவின் லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 59.9 ஹெச்பி பவர், 62.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ரியர் மோனோ ஷாக் உள்ளது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300mm சிங்கில் டிஸ்க், பின்புறம் 250mm ரோட்டார், பாதுகாப்பிற்கு டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் 2023 கவாசகி வல்கன் S மாடல் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீடியோர் 650 மற்றும் பெனலி 502C போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. போட்டி நிறுவன மாடல்கள் இரண்டும் வல்கன் S-ஐ விட குறைந்த விலையில் கிடைக்கின்றன.

    Next Story
    ×