search icon
என் மலர்tooltip icon

    பைக்

    புது நிறங்களில் அறிமுகமான பிஎம்டபிள்யூ F 850 GS மற்றும் R 1250 GS
    X

    புது நிறங்களில் அறிமுகமான பிஎம்டபிள்யூ F 850 GS மற்றும் R 1250 GS

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து புது நிறங்களில் அறிமுகம் செய்தது.
    • நிறம் தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய GS டிராஃபி எடிஷன் நிறங்களை தனது F 850 GS, R 1250 GS மற்றும் R 1250 GS அட்வென்ச்சர் போன்ற மாடல்களில் வழங்கி இருக்கிறது. மூன்று மோட்டார்சைக்கிள்களும் காஸ்மெடிக் முறையில் மாற்றப்பட்டு தற்போது புது நிறங்களில் கிடைக்கின்றன.

    மூன்று பைக்-களிலும் புளூ, சில்வர் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறம் தவிர இவற்றின் அம்சங்கள், மெக்கானிக்கல் பாகங்கள் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் F 850 GS மாடலில் 850சிசி, டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 95ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பிஎம்டபிள்யூ டைனமிக் பேக்கேஜில் இருந்து குயிக்ஷிஃப்டர் பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. R 1250 GS மாடலில் 1254சிசி, பாக்சர் டுவின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 134.1 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது.

    மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் எல்இடி இலுமினேஷன், ABS, ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹீடெட் க்ரிப்கள், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், மல்டி கண்ட்ரோலர், யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலிலும் அதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் உள்ளதை போன்ற சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்படுகிறது

    Next Story
    ×