என் மலர்tooltip icon

    பைக்

    ஹீரோ விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு சென்னையில் துவக்கம்
    X

    ஹீரோ விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு சென்னையில் துவக்கம்

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மூன்று நகரங்களில் கிடைக்கிறது.
    • மூன்று நகரங்களைத் தொடர்ந்து ஹீரோ விடா V1 சென்னையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதற்கட்டமாக பெங்களூரு, ஜெய்பூர் மற்றும் டெல்லி என மூன்று நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வந்தது. மூன்று நகரங்களை தொடர்ந்து ஹீரோ விடா V1 சென்னையில் விற்பனைக்கு வர இருக்கிறது. சென்னையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு தவிர, இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் வினியோக விவரங்கள் பற்றி ஹீரோ நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பெங்களூருவில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலோ ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளஸ் மற்றும் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இவற்றில் ப்ரோ வேரியண்ட் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதோடு, நீண்ட ரேஞ்ச், சிறப்பான அக்செல்லரேஷன் மற்றும் அதிக நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், ப்ரோ மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளிலும் எட்டிவிடும். இதோடு ப்ரோ மாடலில் 3.94 கிலோவாட் ஹவர் பேட்டரியும், பிளஸ் வேரியண்டில் 3.44 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்படுகிறது.

    ஹீரோ விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர்களில்: இகோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் பயனர் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வகை என மொத்தம் நான்கு ரைட் மோட்கள் உள்ளன.

    Next Story
    ×