என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
கேடிஎம்-இன் முற்றிலும் புதிய 390 அட்வென்ச்சர் - வெளியீடு எப்போ தெரியுமா?
- வரும் நவம்பர் மாதம் இத்தாலி நாட்டில் மிலனில் நடைபெறும் EICMA 2024 கண்காட்சியில் புதிய மோட்டார்சைக்கிளை கேடிஎம் அறிமுகப்படுத்தக்கூடும்.
- வரவிருக்கும் மாடல் தோற்றம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டிலும் விரிவான மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 390 அட்வென்சர் மாடலை ஒன்றை உருவாக்கி வருகிறது கேடிஎம். தற்போது விற்பனையில் இருக்கும் 390 அட்வென்சர் மாடலானது 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தற்போது அப்டேட் செய்கிறது கேடிஎம். வரவிருக்கும் 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் அதன் உற்பத்திக்கு தயாரான நிலையில் பலமுறை சோதனை செய்யப்பட்டது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச சந்தையில் கேடிஎம் 390 அட்வென்சரை அறிமுகம் செய்வதற்காக இந்த மாடலின் இறுதிக் கட்ட சோதனையை கேடிஎம் தீவிரப்படுத்தி உள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பைக் விற்பனையில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, கேடிஎம் இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் புதிய 390 அட்வென்சரை உலகளவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர், வரும் நவம்பர் மாதம் இத்தாலி நாட்டில் மிலனில் நடைபெறும் EICMA 2024 கண்காட்சியில் புதிய மோட்டார்சைக்கிளை கேடிஎம் அறிமுகப்படுத்தக்கூடும். வரவிருக்கும் மாடல் தோற்றம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டிலும் விரிவான மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புது பைக்கின் முன்புறம் டூயல் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் கூடிய செங்குத்தான ஹெட்லேம்ப் கிளஸ்டர் மற்றும் ஒரு உயரமான விண்ட்ஸ்கிரீன், கேடிஎம்-இன் ராலி மாடல்களை நினைவூட்டுகிறது. கூடுதலாக, புதிய பாடி பேனல்கள் ஒரு நேர்த்தியான மற்றும் அதிக ஆற்றல்மிக்க நிலைப்பாட்டிற்கு பங்களிக்கின்றன.
2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் சமீபத்திய 390 டியூக்கைப் போலவே வண்ண TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுடன் வரும். இது மாறுபாட்டைப் பொறுத்து 21- அல்லது 19-இன்ச் முன் மற்றும் 17-இன்ச் பின் வயர்-ஸ்போக் சக்கரங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். சஸ்பென்ஷன் அமைப்பானது நீண்டதூர பயணத்திற்கு ஏற்ப அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகளைக் கொண்டிருக்கும், அவை முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஃப்செட் மோனோஷாக் ரியர் யூனிட் வழங்கப்படுகிறது.
வரவிருக்கும் மோட்டார்சைக்கிளில் 390 டியூக்கிலிருந்து பெறப்பட்ட 399 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு ஃப்யூவல்-இன்ஜெக்ட் செய்யப்பட்ட DOHC எஞ்சின் வழங்கப்படும். இது 45.3 பிஎச்பி பவர் மற்றும் 39 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும், இத்துடன் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.
புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர், டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் முன் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக்குகள், தடையற்ற கியர் மாற்றங்களுக்கான இருதரப்பு குயிக் ஷிஃப்டர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்