search icon
என் மலர்tooltip icon

    பைக்

    புதிய நிறம், அதிக அம்சங்கள்.. ரோனின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?
    X

    புதிய நிறம், அதிக அம்சங்கள்.. ரோனின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?

    • ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ட்ரிபில் டோன் நிம்பஸ் கிரே நிறத்தில் கிடைக்கிறது.
    • இந்த மாடலிலும் 225.9 சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ரோனின் 225 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் டி.வி.எஸ். ரோனின் டி.டி. மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஏராளமான மாற்றங்கள், புதிய நிற ஆப்ஷனில் கிடைக்கிறது.

    டி.வி.எஸ். ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ட்ரிபில் டோன் நிம்பஸ் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் புதிய கிராஃபிக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயின்ட் பிரைமரி டோனாகவும் வைட் நிறம் இரண்டாவது டோனாகவும், மூன்றாவதாக ரெட் நிற ஸ்டிரைப் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மோட்டார்சைக்கிளின் ரிம்களில் டி.வி.எஸ். ரோனின் பிராண்டிங், பிளாக்டு-அவுட் பாகங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யு.எஸ்.பி. சார்ஜர், வைசர் மற்றும் எஃப்.ஐ. கவர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும் 225.9 சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.1 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×