search icon
என் மலர்tooltip icon

    பைக்

    யுலு-வின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
    X

    யுலு-வின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

    • 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் யுலு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • பஜாஜ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது ஸ்கூட்டரில் அந்நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    யுலு நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 2023 நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பஜாஜ் டிசைன் மற்றும் உற்பத்தியில் புது இருசக்கர வாகனம் உருவாகி இருக்கிறது. யுலு நிறுவனத்தில் பஜாஜ் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறது.

    முற்றிலும் புது எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் இந்த இருசக்கர வாகனத்தை பஜாஜ் உருவாக்கி இருக்கிறது. இதற்காக பஜாஜ் நிறுவனம் யுலு பைக்ஸ்-இடம் பல்வேறு கருத்துக்களை கேட்டுக் கொண்டு இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஸ்கூட்டரின் பல்வேறு வேரியண்ட்களை அறிமுகம் செய்ய யுலு திட்டமிட்டுள்ளது.

    புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழில்நுட்ப விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாடல் அதிகளவு உள்நாட்டு பாகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருப்பதாக யுலு தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் ஸ்கூட்டரின் விலை குறைவாகவும், போட்டியை ஏற்படுத்தும் வகையிலும் நிர்ணயம் செய்ய முடியும். சரியான விலை நிர்ணயம் செய்வதன் மூலம் டெலிவரி ரைடர் உள்பட கனெக்டிவிட்டி ஆபரேட்டர்களை குறிவைக்கலாம்.

    அடுத்த சில மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இவை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படாது என்றே தெரிகிறது.

    Next Story
    ×