என் மலர்
இது புதுசு
ஹோண்டாவின் புது எஸ்யுவி - அசத்தல் டீசர் வெளியீடு!
- ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புது எஸ்யுவி மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகமாகிறது.
- புதிய எஸ்யுவி மாடல் ஹோண்டா ஆசியா பசிபிக் R&D நிறுவனத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது புது எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய ஹோண்டா எஸ்யுவி வரும் மாதங்களில் வெளியாக இருக்கிறது. விற்பனை கோடை காலத்தில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த எஸ்யுவி மாடல் ஹோண்டா ஆசியா பசிபிக் R&D லிமிடெட் நிறுவனத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய வாடிக்கையாளர்களின் மாறி வரும் வாழ்க்கை சூழல் மற்றும் எதிர்பார்ப்பு உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள ஹோண்டா நிறுவனம் ஏராளமான ஆய்வுகளை நடத்தியது. இதன் தொடர்ச்சியாகவே புது எஸ்யுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. டீசரின் படி புது எஸ்யுவி பிரமாண்ட தோற்றம், ஹை-ரைடிங் பொனெட், மெல்லிய எல்இடி டேடைம் ரன்னிங் லைட்களின் கீழ் மெல்லிய ஹெட்லைட்கள் இடம்பெறுகிறது.
இத்துடன் பிரமாண்ட கிரில், ஃபிலார்டு வீல் ஆர்ச்கள், பிளாஸ்டிக் கிலாடிங், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் இந்திய சந்தைக்காக விசேஷமாக டிசைன் செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த கார் அமேஸ் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மிலேயே உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதோடு ஹோண்டா நிறுவனம் அமேஸ் மாடலின் டீசல் வேரியண்ட்களை சமீபத்தில் நிறுத்தியது.