search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்திய வெளியீடு உறுதி
    X

    ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்திய வெளியீடு உறுதி

    • ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் ஐயோனிக் 5 மாடல் இந்தியா வருகிறது.
    • ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் E-GMP பிளாட்பார்மை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தி இருந்தது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தயாராகி விட்டது. மேலும் இது ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ஏற்கனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது E-GMP பிளாட்பார்மில் உருவான முதல் கார் ஐயோனிக் 5 இந்தியா வர இருக்கிறது. இதே பிளாட்பார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மூலம் ஹூண்டாய் E-GMP பிளாட்பார்மையும் இந்தியா கொண்டு வருகிறது. இதே பிளாட்பார்மில் ஹூண்டாயின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

    புதிய ஐயோனிக் 5 மாடலில் உள்ள அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 5-லின்க் ரியர் சஸ்பென்ஷன், காரில் பயணம் செய்வோருக்கு தலைசிறந்த சவுகரியத்தை வழங்குவதோடு, சிறப்பான ஹேண்ட்லிங் வழங்குகிறது. மேலும் இந்த காரை 350 கிலோவாட் DC சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும்.

    "மொபிலிட்டி துறையில் சாத்தியமானவற்றுக்கு சவால் விடும் எங்களின் பானி, எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்ம் -E-GMP-இல் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியாவில் E-GMP அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர முடியும். இந்தியாவில் உள்ள புது தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் தலைசிறந்த எலெக்ட்ரிக் வாகனங்களை E-GMP உருவாக்கும்." என ஹூண்டாய் மோட்டார் இந்தியா தலைவர், தலைமை செயல் அதிகாரி அன்சூ கிம் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×