search icon
என் மலர்tooltip icon

    கார்

    டெஸ்டிங்கில் சிக்கியா கியா சொரெண்டோ
    X

    டெஸ்டிங்கில் சிக்கியா கியா சொரெண்டோ

    • கியா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது வாகனங்களை காட்சிப்படுத்த இருக்கிறது.
    • கியா சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் புது கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பத்து புது வாகனங்களை கியா இந்தியா காட்சிக்கு வைக்க இருக்கிறது. இந்த பட்டியலில் கியா மோட்டார்ஸ் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி மாடல் இணைந்திருக்கிறது.

    முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் கியா சொரெண்டோ மாடலை இந்தியாவில் காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட சொரெண்டோ மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் சொரெண்டோ மாடல் அதன் நான்காவது தலைமுறையை சேர்ந்தது. இந்த கார் 2020 வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த மாடல் தான் தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.

    கியா சொரெண்டோ மாடலின் வெளிப்புறம் கியாவின் டைகர்-நோஸ் கிரில், 3-பாட் எல்இடி ஹெட்லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அப்ரைட் எஸ்யுவி ஸ்டான்ஸ் மற்றும் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் செங்குத்தாக டெயில் லைட் செட்டப் மற்றும் டெயில்கேட் பகுதியில் சொரெண்டோ எழுதப்பட்டுள்ளது.

    சொரெண்டோ மாடல் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட், 1.6 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட், 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் என நான்கு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், முன்புற வீல் அல்லது ஆல்-வீல் டிரைவ் செட்டப் உடன் வழங்கப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    Next Story
    ×