என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வெளியானது - விலை எவ்வளவு தெரியுமா?
- மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N ஆட்டோமேடிக் மாடல் வெளியானது.
- ஏற்கனவே இந்த காரின் மேனுவல் வேரியண்ட் விலை அறிவிக்கப்பட்டு இருந்தது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N மாடலின் ஆட்டோமேடிக் மற்றும் 4 வீல் டிரைவ் வேரியண்ட்கள் விலையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பெட்ரோல் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம் ஆகும்.
டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை அறிமுக விலை ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி தொடங்குகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.
ஷிப்ட் ஆன் ஃபிளை 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்கார்பியோ N டீசல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய ஸ்கார்பியோ N பெட்ரோல் வேரியண்ட் விலை கடந்த மாதமே அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி இவற்றின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.
புதிய ஸ்கார்பியோ N மாடலில் 2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் எம் ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 200 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 130 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகின்றன.