search icon
என் மலர்tooltip icon

    கார்

    முன்பதிவில் புதிய மைல்கல் எட்டிய மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்
    X

    முன்பதிவில் புதிய மைல்கல் எட்டிய மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • புதிய மஹிந்திரா XUV400 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி, XUV400 மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. மேலும் இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி துவங்கியது. குடியரசு தின வார இறுதி வரையிலான காலக்கட்டத்திற்குள் புதிய எலெக்ட்ரிக் காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில், அறிமுகமான 13 நாட்களில் புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார்களை வினியோகம் செய்ய அதிகபட்சம் ஏழு மாதங்கள் வரை ஆகும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.

    புதிய மஹிந்திரா XUV400 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் EL வேரியண்ட் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் XUV400 EC வேரியண்ட் வினியோகம் துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் 34.5 கிலோவாட் ஹவர் மற்றும் 39.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 மற்றும் 456 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

    இத்துடன் 3.3 கிலோவாட் மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இதன் 39.4 கிலோவாட் ஹவர் வேரியண்டிற்கு 7.2 கிலோவாட் சார்ஜர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் டாடா நெக்சான் EV, எம்ஜி ZS EV, ஹூண்டாய் கோனா மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×