search icon
என் மலர்tooltip icon

    கார்

    கார் மாடல்கள் விலையை உயர்த்தும் எம்ஜி மோட்டார்ஸ்!
    X

    கார் மாடல்கள் விலையை உயர்த்தும் எம்ஜி மோட்டார்ஸ்!

    • எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய கார் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்திய சந்தையில் பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விலையை உயர்த்தி வருகின்றன.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இம்முறை எம்ஜி கார்களின் விலை ரூ. 90 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் மட்டுமின்றி மாருதி சுசுகி, கியா இந்தியா, ரெனால்ட் இந்தியா, ஆடி இந்தியா, மெர்சிடிஸ் பென்ஸ், ஜீப் போன்ற நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கின்றன. பெரும்பாலான கார் உற்பத்தியாளர்களும் ஆண்டு துவக்கத்திலேயே விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளன. தொடர்ந்து அதிகரிக்கும் உற்பத்தி செலவீனங்கள், உதிரி பாகங்கள் விலையை உயர்வே வாகன விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

    விலை உயர்வு தவிர எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி புதிய மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இத்துடன் ஹெக்டார் பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம். இரு கார்களை தொடர்ந்து எம்ஜி நிறுவனம் ஏர் EV எலெக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்கிறது.

    புதிய எம்ஜி ஏர் EV இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும். தற்போது எம்ஜி நிறுவனம் ZS EV எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. புதிய எம்ஜி ஏர் EV விலை இந்தியாவில் ரூ. 10 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 கார்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    Next Story
    ×