search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஒரே நாளில் இரு கார்களை அறிமுகம் செய்யும் பிஎம்டபிள்யூ
    X

    ஒரே நாளில் இரு கார்களை அறிமுகம் செய்யும் பிஎம்டபிள்யூ

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய கார் மாடல்கள் மும்பையில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகின்றன.
    • முன்னதாக புது பிஎம்டபிள்யூ கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜனவரி 7, 2023 அன்று இரண்டாவது ஜாய்டவுன் ஆஃப் தி சீசன் நிகழ்வை நடத்த இருக்கிறது. கடந்த ஆண்டு இதே நிகழ்வு டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை ஜாய்டவுன் ஆஃப் தி சீசன் நிகழ்வில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புதிய 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேம்பட்ட புது செடான் மாடல் முற்றிலும் புது டிசைன், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், பெரிய கிட்னி கிரில், புதிய முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள், அலாய் வீல்கள் மற்றும் ஏராள அம்சங்களை கொண்டிருக்கிறது.

    2023 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடலில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம், இருவித பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின்கள் வழங்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ i7 மாடலில் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களின் உள்புறத்தில் 14.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், டோர் ஹேண்டில்களின் அருகில் 5.5 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் புதிய ஃபிலாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், 31 இன்ச் அளவில் 8K ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட தியேட்டர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×