search icon
என் மலர்tooltip icon

    கார்

    உற்பத்தியில்  புதிய மைல்கல் எட்டிய ரெனால்ட்
    X

    உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய ரெனால்ட்

    • ரெனால்ட் நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4.8 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும்.
    • ரெனால்ட் நிறுவனம் தனது கார்களை உலகின் 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

    ரெனால்ட் நிறுவனம் இந்திய உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. பத்து லட்சமாவது யூனிட்-ஆக ரெனால்ட் கைகர் ரேடியன்ட் ரெட் நிற மாடல் அமைந்தது. இந்த கார் சென்னையில் உள்ள ரெனால்ட் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் குவிட், கைகர் மற்றும் டிரைபர் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    மேலும் ரெனால்ட் நிறுவனம் தனது கார்களை SAARC, ஆசிய பசிபிக், இந்திய பெருங்கடல், தென்னாப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா என 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

    "இந்திய சந்தையில் பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தி எனும் மைல்கல் ரெனால்ட் நிறுவனத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்திய சந்தைக்கு நாங்கள் கொடுக்கும் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாக அமைந்துள்ளது."

    "எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து சுவார்ஸயம் நிறைந்த வாகனங்களை அறிமுகம் செய்து, எங்களது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்வோம்," என்று ரெனால்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் மமலிப்பலே தெரிவித்தார்.

    Next Story
    ×