search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்திய பைக் வாரத்தில் அசத்திய 2023 பிஎம்டபிள்யூ S 1000 RR
    X

    இந்திய பைக் வாரத்தில் அசத்திய 2023 பிஎம்டபிள்யூ S 1000 RR

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 1000சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன் பிஎம்டபிள்யூ தனது சூப்பர்பைக் மாடலை இந்திய பைக் வார நிகழ்வில் காட்சிப்படுத்தியது.

    பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் 2023 S 1000 RR மோட்டார்சைக்கிளை தற்போது நடைபெற்று வரும் இந்திய பைக் வார நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. இதன் மூலம் புதிய S 1000 RR மாடலை பிஎம்டபிள்யூ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 2023 பிஎம்டபிள்யூ S 1000 RR மோட்டார்சைக்கிள் டிசம்பர் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

    டிசைனை பொருத்தவரை பிஎம்டபிள்யூ S 1000 RR மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய முன்புற தோற்றம் பெற்று இருக்கிறது. டிசைனை பொருத்தவரை மெல்லிய எல்இடி ஹெட்லைட், ஃபேரிங்கில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு அதிக ஸ்டேபிலிட்டி வழங்கும் வகையில் ஏரோ பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிதாக சேர்க்கப்பட்ட விங்லெட்கள் 10 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் வழங்குகிறது.

    இதன் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டு அதிக செயல்திறன் வெளிப்படுத்துவதோடு, மேம்பட்ட அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேம் உள்ளது. இது 206.5 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடு கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் பிரேக் ஸ்லைட் அசிஸ்ட், நான்கு ரைடு மோட்கள், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிஃப்டர், லான்ச் கண்ட்ரோல், பிட் லேன் லிமிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×